சென்னை வந்த அமித் ஷாவை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்

பிரசுரிக்கப்பட்டது

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த அமித் ஷா, விமான நிலையத்திற்கு வெளியில் வந்த அவர் சிறிது தூரம் சாலையில் இறங்கி நடந்துவந்தார்.

விமான நிலையத்தில் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். அமித் ஷாவை வரவேற்பதற்காக கிண்டி கத்திபாரா மேம்பாலத்திலிருந்தே பா.ஜ.க., அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த அமித் ஷா, தனது வாகனம் ஜிஎஸ்டி சாலையை வந்தடைந்தவுடன், வாகனத்தை நிறுத்தி, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவருக்காக காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற அவர், பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறி, தனியார் தங்கும் விடுதியைச் சென்றடைந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :