நிற வேற்றுமைக்கு எதிராக காகித பொம்மை செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி பெண்

பிரசுரிக்கப்பட்டது

கோவையில் வசித்து வரும் ராதிகா ஆறுமுகம், செய்தித்தாள் காகிதத்தைப் பயன்படுத்தி கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருந்த இவருக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக் கலை புதிய பாதையை உருவாக்கித் தந்துள்ளது.

செய்தித்தாள், மூங்கில் குச்சி, இரும்புக் கம்பி ஆகியவற்றை உபயோகித்து இவர் உருவாக்கும் பொம்மைகளின் ஆடைகள் பல வண்ணங்களில் ஜொலிக்கிறது. ஆனால், அதன் உருவம் முழுவதும் கருப்பு நிறத்தால் மட்டுமே நிரப்பப்படுகிறது.

2018ம் ஆண்டு முதல் பொம்மை தயாரிப்பை வியாபாரமாக செய்து வரும் இவர், இந்த ஆண்டு மட்டுமே 400 பொம்மைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.

அழகு என்பது நிறத்தில் இல்லை என உணர்த்தும் இவரது கரு நிற காகித பொம்மைகளுக்கு சர்வதேச அளவிலும் ஆர்டர்கள் குவிகின்றன.

காணொளி தயாரிப்பு: G. மதன் பிரசாத் மற்றும் மு. ஹரிஹரன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: