செலின் கவுண்டர் - என்ன சொல்கிறார்கள் தமிழக உறவினர்கள்?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் உருவாக்கியுள்ள கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில், ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார். இதனால், அவரது குடும்பத்தினரும் ஊர்மக்களும் பெருமிதத்தில் உள்ளனர்.
பெருமாப்பாளையத்தில் உள்ள இவர்களின் பூர்வீக வீட்டில், செலின் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்களைக் காண குடும்ப உறுப்பினர்கள் பலர் தற்போது வந்து செல்கின்றனர்.
"அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அவர் எப்போதுமே மதிப்பார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணால், இந்த ஊரும் தமிழகமும் இன்று பெருமையடைந்துள்ளது, " என மகிழ்ச்சியோடு பேசினார் செலினின் சகோதரர் தங்கவேலு.
பிற செய்திகள்:
- மௌனம் கலைத்து பைடனுக்கு வாழ்த்து சொல்லிய சீனா
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: