கொரோனா ஊரடங்கில் கிராமப்புற கலைகள் கற்கும் திருநங்கைகள்
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகளை ஊரடங்கு நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக வேலைவாய்ப்பு, வருமானம் இல்லாமல் தவித்த திருநங்கைகள், ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற எண்ணி நாட்டுப்புறக் கலைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர். 15 திருநங்கைகள் இணைந்து பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை கற்று வருகின்றனர்.
மேலும் அன்பு டிரஸ்ட் நிறுவனரான திருநங்கையும் வழக்கறிஞருமான விஜி 'சகி' என்ற பெயரில் கலைக்குழுவையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது திருநங்கை வழக்கறிஞரான எஸ்.விஜி தான் திருநங்கைகளின் கலைப்பயணத்துக்கு அடித்தளமிட்டது.
காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்
காணொளி தொகுப்பாக்கம்: ஜனார்த்தனன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :