சைலன்ஸ் - திரை விமர்சனம்

காணொளிக் குறிப்பு, சைலன்ஸ் - திரை விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

அமெஸான் பிரைமில் இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', 'பென்குயின்' ஆகிய இரண்டு படங்களுமே மிகச் சுமாரான த்ரில்லர்கள். இப்போது மூன்றாவதாக மீண்டும் ஒரு த்ரில்லர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கிறது கதை. 1970களின் துவக்கத்தில் அங்கே ஒரு பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இருவர் இறந்துபோகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி பிரபல இசைக் கலைஞரான ஆண்டனியும் (மாதவன்) அவரது காதலியான சாக்ஷியும் (அனுஷ்கா) வருகின்றனர். அந்த வீட்டிற்குள் வைத்து ஆண்டனி கொல்லப்படுகிறார். இந்தக் கொலையைத் துப்பறிய வருகிறார் சியாட்டில் நகர காவல்துறையைச் சேர்ந்த மகாலட்சுமி (அஞ்சலி). இதற்கு நடுவில் சியாட்டில் நகரில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். இப்படி பெண்கள் காணாமல் போவதற்கும் ஆண்டனி கொலைக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா, ஆண்டனி ஏன் கொல்லப்படுகிறார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் மீதிக் கதை.

விமர்சனம்: முரளிதரன் காசி விஸ்வநாதன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

.