You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாத்ரஸ் வழக்கில் வெளியாகும் முரண்படும் தகவல்கள்: உண்மையில் என்ன நடந்தது? #BBCGroundReport
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரத்தில் முரண்படும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், மருத்துவ அறிக்கை அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆனாக்கப்பட்டதை உறுதிபடுத்தவில்லை என ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் கூறுகிறார்.
தடயவியல் விசாரணை இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. வந்தால் மட்டுமே தெளிவாக எதையும் கூறமுடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டும் அப்பெண்ணின் குடும்பத்தாருக்கும், இன்னும் அந்த மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: