காஷ்மீர் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் வரைபடம்: இந்தியாவின் அஜித் தோவல் வெளிநடப்பு

பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில், காஷ்மீரை தங்கள் நாட்டின் பிராந்தியமாக காட்டும் வரைபடத்தை பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காட்டியதால், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முதலாம் ஆண்டு தினமான சென்ற ஆகஸ்டு 5ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடத்தை வெளியிட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :