கோவை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - விரிவான தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

கோவை நகரில் உள்ள செட்டி வீதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடம் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. யுள்ளது.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 வயது ஆண் குழந்தை உட்பட 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். குடியிருப்பில் வசித்து வந்த 25 வயது பெண் உள்பட இருவர், 70 வயது முதியவர் என மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டன் (42) இன்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த ஸ்வேதா (27) மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த கோபால்சாமி- கஸ்தூரி மற்றும் மகன் மணிகண்டன் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தை ஒட்டி சிறிய ஓட்டு வீடுகளும் இருந்துள்ளது. இதில் மொத்தமாக 10க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக அருகில் குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கான காரணம்

இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையான கட்டடம் என தெரியவந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடத்தை வாங்கியவர் முறையான வடிவமைப்பின்றி மேல் தளங்களை கட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், இடிந்து விழுந்த குடியிருப்புக்குப் பின்புறம் செல்வ சிந்தாமணி குளம் எனும் நீர்நிலை உள்ளது. தற்போது, இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டப்பணிகளால் ஏற்பட்ட அதிர்வுகளும் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளையும் கட்டட விபத்தையும் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல என அதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: