போலீஸ் காரரின் மிதிவண்டிப் பயணம்: தினமும் 40 கி.மீ. மிதித்து பணிக்கு செல்கிறார்

காணொளிக் குறிப்பு, 40 கி.மீ மிதிவண்டி பயணத்தில் காவல் பணியாற்றும் காவலர்
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக 32 வயதுடைய மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், 2009ஆம் ஆண்டு காவலராகத் தேர்வாகி, கடந்த 12 ஆண்டுகளாக காவல் துறையில் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சைக்கிள் மூலமாக காவல் நிலையத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.

வீட்டிலிருந்து 20கிமீ தொலைவிலிருக்கும் இவரது காவல் நிலையத்திற்கு, தினமும் சென்று வர 40கிமீ பயணம் மேற்கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: