You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சென்னையில் விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் திருநங்கைகள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் பேசி அவர்களின் உடல்நலன் குறித்து கேட்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசேர்க்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- இலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
- லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு `அரசின் அலட்சியமே காரணம்`
- சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்
- இலங்கை தேர்தல்: வரலாற்றை மாற்றி அமைக்குமா "தாமரை மொட்டு"?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: