85 வயது ஷாந்தாபாய் பாட்டிக்கு வாழ்க்கையே சாகசம்தான்: கொரோனாவுக்கு மத்தியிலும் வீதிக்கு விரட்டும் வாழ்க்கை

காணொளிக் குறிப்பு, சாகசப் பாட்டியின் வாழ்க்கைப் பயணம்
பிரசுரிக்கப்பட்டது

ஷாந்தாபாய் பவாருக்கு வயது 85. இந்த வயதிலும் பிரமிக்கத்தக்க சாகசங்களை செய்கிறார். இவரது விரல்களுக்கு இடையில் காற்றாக சுற்றுகிறது கழி.

இதையெல்லாம் அவர் செய்வது ஒரு சாதனையாளரின் பெருமிதத்தோடு அல்ல. வயிற்றுப்பாட்டை கவனிக்கவேண்டும் என்ற வாழ்க்கை நிலைதான் அவரை வழக்கமான சாகசங்களை செய்யச் சொல்லி கொரோனா காலத்திலும் தெருவுக்கு விரட்டுகிறது. இதோ பாட்டியின் வீதி சாகசங்களைப் பாருங்கள், வாழ்க்கை சாகசத்தைப் பற்றியும் கேளுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: