கொரோனா வைரஸ் ஊரடங்கு: ஊழியர்களுக்காக பிரியாணி விற்கும் முதலாளி
ஊரடங்கு தளர்த்தப்பட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலை புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டவருக்கு உணவு சமைத்து இயங்கி வந்த பிரபல தனியார் உணவகம் ஒன்று, கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இதனால் இங்கே பணிபுரிந்து வந்த சுமார் 30 பணியாளர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் உணவக உரிமையாளர் ஆண்டனி என்பவர், ஊழியர்களின் நலன் கருதி கார் மூலமாகப் பிரியாணி விற்பனை செய்ய முடிவெடுத்தார்.
பிரான்ஸ், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பிரத்யேகமாக பல்வேறு வகையான உணவை சமைத்துக் கொடுத்த இந்த உணவகம், தற்போது புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் பிரியாணி உற்பத்தி செய்கிறது.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :