சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: 'காவல்துறை வன்முறை ஊக்குவிக்கப்படுகிறது'

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: 'காவல்துறை வன்முறை ஊக்குவிக்கப்படுகிறது'
பிரசுரிக்கப்பட்டது

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை -மகன் தாக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதைவிட, தந்தை -மகன் வன்முறையால் கொல்லப்பட்டனர் என்றுதான் சட்டப்படி சொல்லவேண்டும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம், காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட வன்முறையால் நிகழ்ந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் பேசப்படும் இந்த வழக்கின் காரணமாக, காவல் நிலையங்களில் பாதுகாப்பு குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

காவல்நிலையங்களில் நிகழும் வன்முறைக்கு எதிராக குரல்கொடும் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசியபோது, கைதுசெய்யப்படும் நபர்கள் மோசமான மனித உரிமை மீறலுக்கு ஆளாவது குறித்து விளக்கினார்.

செய்தி: பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: