இந்திய - சீன எல்லை மோதல்: சீன முதலீட்டை மறுத்த மகாராஷ்டிர அரசு

காணொளிக் குறிப்பு, இந்திய - சீன எல்லை மோதல்: சீன முதலீட்டை மறுத்த மகாராஷ்டிர அரசு
பிரசுரிக்கப்பட்டது

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்கள் மோதிக்கொண்ட ஜூன் 15ம் தேதி சீன நிறுவனத்துடன், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய - சீன எல்லையில் ஜூன் 16ம் தேதியில் இருந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அன்று மதியம் ''இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு'' என்ற செய்தி வெளிவந்தது.

இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில், ''சீன மோட்டார் நிறுவனமான ஜி.டபிள்யூ.எம் மற்றும் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; 3000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க 100 கோடி டாலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது,'' என்ற அறிவிப்பும் வெளியானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: