You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் முஸ்லிம் கலைஞர் மஜீ கான்: மணல் கலை படைப்புகள் மூலம் லட்சக் கணக்கில் ஈட்டுகிறார்
குஜராத்தின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் மஜீ கான் மணலை கொண்டு கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார். தனது முதல் கலை படைப்பை 485 ரூபாய்க்கு விற்பனை செய்த மஜீ கான், தற்போது ஓர் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.
ரான் ஆஃப் கட்ச் பாலைவனத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஷினியாடோ என்ற கிராமம் உள்ளது. இங்கு தான் மஜீ கான் வசிக்கிறார். இவர் பாரம்பரிய மணல் கலையில் கைத்தேர்ந்தவராக விளங்குகிறார். உலகின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இவரின் படைப்புகளை இணையம் மூலம் ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.
தனது தந்தையின் ஆதரவு மற்றும் தனது கலைத் திறனை முதலீடாக வைத்து மஜீ கான் இந்த படைப்புகளை உருவாக்க துவங்கியுள்ளார். ஆனால் இந்த கிராமத்தில் இருந்துக்கொண்டே உலகிற்கு இந்த மணல் கலையை தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் மஜீ கான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: