கொரோனாவுக்கு பயந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: சிகிச்சையின்றி இறந்த ஆண்

பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறு சாலையில் செல்பவர்களிடம் உதவி கேட்ட நபர், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்துள்ளார்.

சுற்றி இருப்பவர்களிடம், தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு அவர் கேட்கும் காணொளி வெளியாகியுள்ளது.

காமரெட்டி எனும் இடத்தில் இருந்து ஹைதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்ரீனிவாஸ் பாபு என்பவருக்கு ஆஸ்துமா பிரச்சனை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது.

அவர் சாலையோரம் விழுந்து கிடந்ததை பார்த்த சென்குண்டா எனும் கிராம மக்கள் அவசர ஊர்தியை அழைத்துள்ளனர். ஆனால், அவசர ஊர்தியின் ஊழியர்கள் ஸ்ரீனிவாஸ் பாபுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று சந்தேகித்துள்ளனர்.

தங்களிடம் மருத்துவப் பாதுகாப்பு அங்கிகள் இல்லை என்பதால் அவர்கள் வேறொரு அவசர ஊர்தியை அழைத்துள்ளனர்.

இரண்டாவது அவசர ஊர்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: