You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட யானை
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: