QR கோட் மூலம் பணம் பறிக்கும் ஆட்கள் - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சென்னையில் கடந்த சில வாரங்களில் சுமார் 20 நபர்கள் பணப் பரிமாற்றத்திற்காக போலி க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ததில்ஒரு லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சைபர் குற்றப்பிரிவில் பதிவாகும் புகார்களில் சுமார் இருபது சதவீத புகார்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பானதாக உள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் மட்டும் க்யூ ஆர் கோடு மூலமாக ஏமாற்றப்பட்டதாக 20 புகார்கள் பதிவாகியுள்ளதால், க்யூ ஆர் கோடு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் பணம் அனுப்புவதற்கு மட்டும்தான் ஸ்கேன் செய்யவேண்டும். ஆனால் தற்போது சென்னையில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் பணத்தை ஒருவரிடம் இருந்து பெறுவதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு மற்றும் காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: