தலித் பெண் தமிழக உள்ளாட்சி தேர்தலில் 10 வாக்குகளில் வென்றது சாதியை மீறியா?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற தலித் பெண் ஊராட்சி மன்றத்தின் தலைவரானது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பையும் மீறி ராஜேஸ்வரி வென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சாதியினர் கூறியதால்தான் தேர்தலில் போட்டியிட்டதாக ராஜேஸ்வரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டது ஏன், பிச்சிவிளையில் என்ன பிரச்சனை, அவர் ஐந்து ஆண்டுகளும் பதவியில் நீடிப்பாரா போன்ற கேள்விகளுக்கு இந்த காணொளி பதிலளிக்கிறது.
கட்டுரை வடிவில் படிக்க: 10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?
காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ
பிற செய்திகள்:
- “இரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்காது” – டிரம்ப் உறுதி
- அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல்: "அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை" - டிரம்ப் LIVE
- தர்பார்: ரஜினி அரசியல் நுழைவுக்கு கட்டியம் கூறும் படமா? என்னென்ன எதிர்பார்ப்புகள்?
- நாங்கள் கோழை அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளை தாக்குவோம்: இரான் அமைச்சர் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: