மேட்டுப்பாளையம் ’தீண்டாமை சுவர்’ இடிக்கப்பட்டது: பிரிவினை அகலுமா?
கோவையின் மேட்டுப்பாளையம் நகராட்சியில நடூரில் கோ-ஆப்பிரேட்டிவ் காலனியும் ஆதி திராவிடர் காலனியும் உள்ளன.
கோ-ஆப்பிரேட்டிவ் காலனியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தனி குடியிருப்புகளில் பெரும்பாலனவை ஆடம்பர வீடுகள்.
இவற்றின் உரிமையாளர்கள் துணிக்கடை, மெட்ரிக் பள்ளி, பாக்கு வியாபாரம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.
அருந்ததியர் வகுப்பு மக்கள் வசிக்கும் ஆதி திராவிடர் காலனியை பிற சமுதாயத்தினர் வாழும் பகுதியில் இருந்து பிரிக்கும் வகையில் கட்டப்பட்டது தான் 20 அடி உயரமுள்ள கருங்கல் சுவர்.
ஆதி திராவிடர் காலனியில், 100 க்கும் மேற்பட்ட தலித் மக்கள், குடிசையிலும், ஓடு மற்றும் சிமெண்ட் ஷீட் கூரை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
துப்புரவு பணி, நடமாடும் உணவகம், ஆட்டோ ஓட்டுநர் தொழில்களை செய்வதோடு, தினக்கூலிகளாகவும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இரண்டு குடியிருப்பு பகுதிகளுக்கும் நடுவே உள்ள நீளமான சுவரில், சிவசுப்பிரமணியம் என்பருக்கு சொந்தமான இடத்திலிருந்த சுவர் இடிந்து விழுந்ததில், ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர்.
சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை அடுத்து, சுமார் 570 அடி நீளத்தில் கட்டப்பட்டிருந்த மொத்த சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்த நில உரிமையாளர்களிடம் பேசியபோது, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்