ஒரு காகமும் ரிக்ஷா ஓட்டுநரும்: மனிதம் கடந்த நட்பின் கதை

காணொளிக் குறிப்பு, Auto Ricksha driver Selvaraj rescued crow, and become crow's close friend
பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரியில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் செல்வராஜ், உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். நாளடைவில் அந்தக் காகம் இவரை தினமும் தேடி வரத் தொடங்கியுள்ளது. தினமும் அதற்கு உணவும், தண்ணீரும் ஊட்டிவிடுகிறார் செல்வராஜ்.

"கடவுள் கொடுத்த பாக்கியத்தால்தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஓர் உறுப்பினராகப் பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை இந்த காகம் விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவு கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைந்து கொண்டே இருக்கும்" என்று கூறுகிறார் செல்வராஜ்.

காணொளி தயாரிப்பு : நடராஜன் சுந்தர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: