ஐஐடி ஃபாத்திமா: நீதி கேட்டு விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்

பிரசுரிக்கப்பட்டது

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் வலுத்துவருகிறது . தனது மகள் தற்கொலை செய்துகொள்ள எப்படி கயிறு கிடைத்தது என ஃபாத்திமா லத்தீஃப் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார் 

பலரும் ஃபாத்திமாவுக்கு அவர் பயின்ற துறையில் உள்ள பேராசிரியர்கள் மத ரீதியான பாரபட்சம் காட்டியதாக குற்றஞ்சாட்டி சமூகவலைத்தளங்களில் ''ஜஸ்டிஸ் பாஃர் ஃபாத்திமா''(Justice for Fathima) என்ற பெயரில் பதிவுகள் எழுதிவருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த ஃபாத்திமாவின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளனர். மேலும் டி ஜி பி அலுலத்தில் பேசிய பாத்திமாவின் தந்தை என் மகள் தற்கொலை செய்யவில்லை, தூக்குயிட்டுகொள்ள எப்படி கயிறு கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீதி கிடைக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்