மாமல்லபுரம் மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: சுழலில் சிக்கிய சுற்றுலா

காணொளிக் குறிப்பு, மோதி - ஷி ஜின்பிங்க் சந்திப்பிற்காக தயாராகும் மாமல்லபுரம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய பிரதமர் நரேந்திரமோதியும், சீன அதிபர் ஷி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

இதற்காக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தப்பட்டுவருகின்றன. 16.5 சதுர கி.மீ. பரப்புள்ள அந்த ஊர் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஊரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கடலில் அலைச்சறுக்கு விளையாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் 4ஆம் தேதியிலிருந்தே கடலுக்குச் செல்ல வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

காணொளி: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :