சினிமாவில் பாடப்போகும் சமூக ஊடகங்களின் செல்லக்குரல் திருமூர்த்தி

காணொளிக் குறிப்பு, சினிமாவில் பாடப்போகும் சமூக ஊடகங்களின் செல்லக்குரல் திருமூர்த்தி
பிரசுரிக்கப்பட்டது

அஜித் மதன் என்பவர் பகிர்ந்த ஃபேஸ்புக் காணொளியில், பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி. இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில் பிறந்த பார்வை திறனற்ற திருமூர்த்தி பாடிய இந்த பாடலை 288, 273 பேர் பார்த்திருந்தனர். 802 பேர் பகிர்ந்திருந்தனர்.

இதனை பார்த்த இசையமைப்பாளர் இசையமைப்பாளர் டி.இமான், திருமூர்த்தியை அழைத்து பேசியுள்ளார்.

காணொளி தயாரிப்பு மதன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :