ஒட்டி பிறந்த இரட்டையரின் வாழ்க்கை: அவர்களின் எதிர்காலம் பற்றி கனவு காணும் தந்தை
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு ஆப்பிரிக்காவின் செனகலில் 2016 மே மாதம் பிறந்த மரிமேவும், நாடியாவும் ஒட்டி பிறந்த இரட்டையர்.
இவர்கள் பிறந்தபோது, சில நாட்களில் இறந்துவிடுவர் என மருத்துவர்கள் எண்ணிய நிலையில், இப்போது மூன்று வயதாகி, செப்டம்பர் மாதம் வேல்சில் முழுநேர நர்சரியில் கல்வி கற்க தொடங்கவுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், இவர்களை பிரிப்பதற்கு முயற்சிகளை மருத்துவர்கள் ஆலோசித்த நிலையில், அது முடியாத காரியம் என இப்போது தெரிய வந்துள்ளது.
மரியமே, நாடியாவை சார்ந்திருப்பதைபோல, நாடியாவும் வாழ்வதற்கு மரியமேயை சார்ந்துள்ளார்.
ஆனால், இவர்களின் ஸ்திரமான எதிர்காலம் குறித்து இவர்கள் தந்தை கனவு காண்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்