வெதர்மேன் பிரதீப்ஜான் பேட்டி: மழை கொட்டித் தீர்க்கும் 'அவலாஞ்சி' தமிழ்நாட்டின் சிரபுஞ்சியா?

காணொளிக் குறிப்பு, “மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தியது இந்த ஆண்டு மழை” - வெதர் மேன்
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரியில் பெய்தது கிளவுட் பர்ஸ்ட் மழை இல்லை. சாதாரணமாக பெய்யும் பருவகால மழைதான். நீலகிரியில் ஒரு நாள் 820 மில்லிமீட்டர், அடுத்த நாள் 911 மில்லிமீட்டர் பெய்தது. இது கிளவுட்பர்ஸ்ட் மழை இல்லை. பருவகாலத்தில் பெய்யும் மழையில் அதிகபட்ச மழைபொழிவு ஏற்பட்டது என்று சொல்லலாம் என்கிறார் வெதர் மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்.

அசாம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு அதிக கனமழை பதிவானது. சென்னை போன்ற இடங்களில் 200 மில்லிமீட்டர் பெய்தால் கனமழை என நினைப்போம். இங்கு மழை நீர் வெளியேற இடங்கள் குறைவாக இருப்பதால் தண்ணீர் தேங்குவதால் நமக்கு அவ்வாறு தெரிகிறது என்கிறார் அவர்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: