முத்தலாக் தடைச் சட்டம்: வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா?

பிரசுரிக்கப்பட்டது

பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது.

தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணிக்கை இரண்டாக உயரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :