துருக்கி நிலநடுக்கத்தில் இந்த நகரின் கட்டடங்களுக்கு மட்டும் ஏன் எந்த சேதமும் ஏற்படவில்லை?

காணொளிக் குறிப்பு, துருக்கி நிலநடுக்கத்தில் இந்த நகரின் கட்டடங்களுக்கு மட்டும் ஏன் எந்த சேதமும் ஏற்படவில்லை?
பிரசுரிக்கப்பட்டது

துருக்கியின் எர்சின் நகரில் எந்த ஒரு கட்டடத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. சிறிய வீடுகள் மற்றும் மசூதி மேல் இருந்த மினாராக்கள் மட்டுமே சேதமடைந்திருந்தன.

இந்த பகுதி, முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000க்கும் மேல் உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளிலும் 33,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. 1939ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது.

எர்சின் நகரில் பெரும்பாலும் ஒரு மாடி கட்டடம், சில இடங்களில் ஆறு மாடி கட்டடங்கள் உள்ளன. வீடுகளையும் குடியிருப்புகளையும் கட்டும்போது இங்கு வாழ்ந்தவர்கள் மிகவும் அக்கறையுடன் வீடுகளையும் கட்டடங்களையும் கட்டுகிறார்கள் என்கிறார் உள்ளூர் மேயர்.

விதிமுறைகளை மீறி கட்டடங்களை எழுப்பவோ குடியிருப்புகளை கட்டவோ தொழிலாளர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் எல்லோருமே உள்ளூர்காரர்கள் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

களத்தில் இந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்கத்தின் தீவிர பாதிப்பை எதிர்கொள்ளாதது ஆச்சரியமளிக்கிறது. அங்குள்ள கள நிலவரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்