தாய்லாந்தில் 13 மீ ஆழ கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை - மீட்கப்பட்ட நெகிழ்ச்சி தருணம்

பிரசுரிக்கப்பட்டது

மியான்மரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தம்பதியின் குழந்தை அது.பெற்றோர் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த போது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தவறுதலாக 13 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது.குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஒரு இரவு முழுவதும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை சிறு சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.18 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டதால் அடைந்த நிம்மதியை, பெற்றோரால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: