காதல் சொல்லும் வேளையில் கரடி நுழைந்த சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது
காதல் சொல்லும் வேளையில் கரடி நுழைந்த சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
மெக்சிகோவின் நொவேலியா லியான் மாகாணத்தில் உள்ள சிப்பிங்க்கே பூங்காவில், காதலைச் சொல்ல வந்த ஜோடியின் குறுக்கே கரடி ஒன்று நுழைந்தது.
ஆனால், "இது ஒரு சுவாரஸ்யமான சம்பவம். இதை என் குழந்தைகளிடமும் பேரக் குழந்தைகளிடமும் கூட சொல்லத் தயாராக உள்ளேன். இது என்றும் நான் என் நெஞ்சில் வைத்திருக்கும் நிகழ்வாக இருக்கும். ஏதோ இயற்கையோடு இருந்தது போல, ஒரு கரடி அங்கிருந்ததை ஒரு சிறப்பான தருணம் என்றே எண்ணுகிறேன்" என்கிறார் அந்தப் பெண்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்