இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்து போட்டி ஒன்றின் பின் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குறைந்தது 174 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியதால் அதிலிருந்து ரசிகர்கள் தப்பியோட முயன்ற போது இந்த கூட்ட நெரிசல் உண்டானது.

அரேமா எப்.சி என்னும் அணியினர் அவர்களின் பரம எதிராளி அணியான பெர்சேபயா சுராபயா எனும் அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் உண்டான மோதலில் குறைந்தபட்ச 180 பேர் காயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: