மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியில் மேக்கப் இல்லாமல் பங்கேற்ற மாணவி
பிரசுரிக்கப்பட்டது
லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூஃப் என்ற 20 வயது மாணவி, அழகியலில் இவை அவசியம் என நம்பும் கோட்பாடுகளுக்கு சவால் விடவும், அவை நம் மனநலனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை காட்டவும் விரும்புவதாகக் கூறுகிறார். சமீபத்தில் நடந்த மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில், 'துளியும் மேக்கப் இல்லாமல்' வந்த முதல் போட்டியாளர் மெலிசா என்று இவரை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்தனர். இவர் ஏன் மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்டார் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்