You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்ஜென்டீனா துணை அதிபர் மயிரிழையில் தப்பினார் - துப்பாக்கி பழுதானதால் உயிர் பிழைத்த காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அர்ஜென்டீனா துணை அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னரை கொல்ல ஒரு நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், திடீரென துப்பாக்கி பழுதானதால் கிறிஸ்டினா உயிர் பிழைத்தார்.
இது குறித்த காணொளி ஒன்று அர்ஜென்டீனா ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிர்ச்னர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்களிடையே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்திலிருந்து திடீரென முன்னோக்கி வந்த ஒரு நபர், துணை அதிபர் முகத்தின் மீது குறி வைத்து துப்பாக்கியை அழுத்தியதை இந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்