You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவுக்கு ரஷ்யா விடுத்த பகிரங்க எச்சரிக்கை - யுக்ரேனுக்கு ஆயுதம் தர எதிர்ப்பு
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய இரண்டு பக்க குறிப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் யுக்ரேனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் யுக்ரேனில் நடக்கும் போருக்கு எண்ணெய் வார்ப்பதாக உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனுக்கான அமெரிக்காவின் புதிய ஆயுத உதவித் தொகுப்பு குறித்த தகவல் கசியத் தொடங்கிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த எச்சரிக்கை குறிப்பு வெளிவந்த சில மணி நேரம் கழித்து 80 கோடி டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவியை யுக்ரேனுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்