கர்ணம் மல்லேஸ்வரி: பளுதூக்குதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்

பிரசுரிக்கப்பட்டது

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் கர்ணம் மல்லேஸ்வரி. இளம் வயதிலேயே பளுதூக்குதலில் ஈடுபட்ட இவருடைய வாழ்க்கைப் பயணம், தென்னிந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தொடங்கியது.

“நான் ஒருபோதும் தோற்பதில்லை. தோற்றாலும் அதிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்கிறேன். எனவே இது தோல்வியல்ல, கற்றல் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார் கர்ணம் மல்லேஸ்வரி.

“ஒலிம்பிக்கில் பங்கேற்பதை இலக்காகக் கொண்டிருந்த பெண்கள், இப்போது பதக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளனர், அதனால்தான் நாங்கள் இப்போது பதக்கங்களைப் பெறுகிறோம். சிட்னி ஒலிம்பிக்கில் நான் தவறவிட்ட தங்கப் பதக்கத்தை எனது அகாடமியின் பளுதூக்குபவர்கள் மூலம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது கனவு.” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: