ரஷ்ய படையெடுப்பு: இன்று இதுவரை நடந்தது என்ன? - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் மீது ரஷ்யா 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
- யுக்ரேன் படையில் இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய படையை சேர்ந்த 500 - 600 பேர் யுக்ரேனிடம் சரணடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார் ஆனால் இந்த தகவலை பிபிசி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
- யுக்ரேனின் மேரியபோல் நகரை ரஷ்ய படைகள் சூழ்ந்துள்ளது. பல நாட்களாக நடைபெற்று தாக்குதலால் அந்நகரில் குடிநீர், உணவு மற்றும் மின்சார வசதி இல்லாமல் மக்கள் துன்பப்படுகின்றனர் இந்நிலையில் மரியபோல் நகரிலிருந்து விலகி செல்லுமாறு புதினிடம் கேட்டுக் கொண்டுள்ளார் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்.
- ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல்வேறு நகரங்களில் மக்களை வெளியேற்ற முடியவில்லை என யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் மற்றும் ஜெர்மன் ஆட்சித் துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் ஆகியோர் யுக்ரேனில் தாக்குதலை நிறுத்துவதற்கு புதினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனிதாபிமான வழித்தடங்களை ஏற்படுத்த தாங்கள் வழங்கும் பரிந்துரைகளை யுக்ரேன் தொடர்ந்து நிராகரித்து வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
- யுக்ரேனின் மேரியோபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படையினர் தடுத்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நிகோலேவ், டினீப்ரோ ஆகிய நகரங்களில் சனிக்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புகள் கேட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி யுக்ரேனிய மொழி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
- தீ மற்றும் பொருட்கள் இல்லாமல், முற்றுகையிடப்பட்ட வடக்கு செர்ன்ஹிவ் நகரில் நிலைமை ஒவ்வோர் நாளும் மோசமாகி வருகிறது.
- யுக்ரேனிய அவசரகால சேவை தகவலின்படி ஷெல் தாக்குதலின் விளைவாக, கீயவ் பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.
- கீயவை போலவே செர்னிஹிவ், கார்ஹிவ், மேரியோபோல், சுமி ஆகிய நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அங்கு கடுமையான ஷெல் தாக்குதல்களை ரஷ்ய படையினர் நடத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்?
- யுக்ரேன் Vs ரஷ்யா: போர்க்குற்றம் என்றால் என்ன? புதினை விசாரணை செய்ய முடியுமா?
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்

















