இரானிய சிறுமியின் சந்தூர் இசையில் இந்திய தேசிய கீதம்

பிரசுரிக்கப்பட்டது

இன்டர்நெட்டில் பல காணொளிகள் அவ்வப்போது வைரலாவதுண்டு. அத்தகைய காணொளிகளில் ஒன்றாக வைரலான இந்த காணொளியில் இருப்பவர் இரானிய சிறுமி தாரா கஹ்ரேமானி. தமது சந்தூர் இசைக்கருவியில் இந்திய கீதத்தை இசைத்து அந்தக் காணொளியை நாட்டின் சுதந்திர தின நாளில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் இவர்.

இந்தியாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, இங்கு வாசிக்கப்பட்ட தேசிய கீதத்தால் கவரப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்த இவர், தமது பரிசாக இந்த சந்தூர் இசையில் இந்திய தேசிய கீதத்தை வழங்குவதை கனவாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். அவரது இசை திறனை நீங்களும் பாருங்களேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :