You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஷாரஃப் தொலைபேசியை ஒட்டுக் கேட்ட 'ரா' இந்திய உளவு அமைப்பு
சைபர் உளவு தொடர்பான சர்ச்சை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேவு பார்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) ஒட்டுக் கேட்ட வரலாறை நினைவு கூர்வோம்.
மே 26, 1999 அன்று, இரவு 9.30 மணிக்கு, இந்திய ராணுவ தலைமை ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கின் பாதுகாப்பான உள் இணைப்பகத் தொலைபேசி மணி ஒலித்தது. மறுமுனையில் இந்தியாவின் உளவு அமைப்பான ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் செயலாளர் அரவிந்த் தவே.
பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃப் தொலைபேசி தொடர்பாக அன்றைய தினம் அவர்கள் பேசிய பல விஷயங்கள் அதிர்ச்சியளித்தன. அந்த வரலாற்று நிகழ்வை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- ராஜ் குந்த்ராவின் ஹாட்ஷாட்ஸ் செயலி: "என் கணவர் தயாரித்தது ஆபாச படம் அல்ல" - ஷில்பா ஷெட்டி
- தோற்றாலும் துவளாத 12 வயது 'ஒலிம்பிக் நம்பிக்கை' ஹெண்ட் ஸாஸா
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்