'பாரதி' - அண்டார்டிகாவில் கண்டுபிடித்த புதிய தாவரத்திற்கு பெயர் வைத்த இந்திய விஞ்ஞானிகள்

பிரசுரிக்கப்பட்டது

அன்டார்டிகாவில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு 'பாரதி' என பெயரிடப்பட்டுள்ளது.

துருவ பகுதிகளை ஆய்வு செய்து வரும் தாவரவியல் நிபுணர்கள், 2017-ஆம் ஆண்டு ஒரு வகை பாசியைக் கண்டறிந்தனர். அதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

ஆயினும் அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முடிவு செய்வதற்கு பெரும் உழைப்புத் தேவைப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் அடையாளம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :