பாகிஸ்தானில் இந்து சாமியார் சமாதி மீது தாக்குதல் - என்ன நடந்தது?
பாகிஸ்தான் கைபர் பக்தூங்வா பகுதியில் உள்ள இந்து சாமியார் சமாதி ஒன்றின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் இந்துக்கள் யாரும் குடியிருக்கவில்லை என கரக் மாவட்ட காவல்துறை அதிகாரி இர்ஃபானுல்லா மார்வாத் பிபிசி செய்தியாளர் சிராஜுதீனிடம் தெரிவித்தார். சமாதிக்கு அருகில் நடந்து கொண்டிருந்த கட்டட வேலைகள், அச்சமாதியின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் கருதினார்கள்.
இந்தப் போராட்டம் குறித்து போலீசுக்கு தெரியும் என்றும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் கூறுகிறார் மார்வாத். இந்தப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒர் இஸ்லாமிய மதகுரு, மக்களைத் தூண்டிவிட்டு ஒட்டுமொத்த சூழலையும் பாழாக்கிவிட்டார். கூட்டம் அதிக அளவில் இருந்ததால், கலவரத்தைப் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார் மார்வாத்.
இந்த விவகாரத்தின் கள நிலவரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கேரள சட்டமன்றம்
- சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- யேமென் போர்: விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் பலி
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்