You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் சுவிட்சர்லாந்தில் 198 கோடி ரூபாய்க்கு ஏலம்
உலகின் மிகவும் அரிதான பர்புள் - பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று சுவிட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும்.
அதன் அளவு, நிறம் மற்றும் அமைப்பு ஆகியவையே இந்தக்கல் இவ்வளவு விலைபோக காரணம்.
இதனை ஏலம் எடுத்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அல்ரோசா என்ற ரஷ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஷ்ய - போலாந்து பாலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்று பெயரிடப்பட்டது.
2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்தக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?
- பொதுவெளியில் புகை பிடிக்கும் கிம்: சமூக பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறது வட கொரியா?
- "இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தக்க பதிலடி" - நரேந்திர மோதி
- "மனிதர்களைக் கவனிப்பதன் மூலமே என் பாத்திரங்களை மேம்படுத்துகிறேன்": எம்.எஸ். பாஸ்கர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: