போட்ஸ்வானாவில் 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, போட்ஸ்வானாவில் 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: