You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் துன்புறுத்தல், பட்டினி மற்றும் சித்ரவதை - நைஜீரியாவில் 500 பேர் மீட்பு
நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சித்ரவதை மையத்தால் அதிர்வலைகள் தோன்றியுள்ளன.
நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள நகரான காடுனாவில் இருக்கும் பெரியதொரு கட்டடத்தில் இருந்து சுமார் 500 பேரை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
அங்குள்ள ஆண்களும், சிறுவர்களும் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.
தாங்கள் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பட்டினி போடப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மனிதர்களை அடிமை படுத்தும் சம்பவம் இதுவென அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
இதுவொரு குரான் கற்றுக்கொடுக்கும் பள்ளி என்று சொல்லி, தாங்கள் அழைத்துவரப்பட்டதாக மீட்கப்பட்ட சில குழந்தைகள் கூறினர்.
இதுவொரு பள்ளியாக இருந்ததற்கு சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்