சான் ரேச்சல்: "அழகுக்கு நிறம் ஒரு பொருட்டல்ல" - மாடலிங் துறையில் புதுச்சேரி பெண்

காணொளிக் குறிப்பு, "அழகுக்கு நிறம் ஒரு பொருட்டல்ல" மாடலிங் துறையில் சாதிக்கும் சான் ரேச்சல்
பிரசுரிக்கப்பட்டது

சிறு வயதில் தாயை இழந்த சான் ரேச்சல், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அவருடைய ஆதரவே தான் மாடலிங் துறையில் கால் பதிக்கப் பெரிதும் உறுதுணையாக இருந்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல் கூறுகிறார்.

23 வயதேயான சான் ரேச்சல் மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே தன்னைச் சுற்றியிருக்கும் பலரால் தன் நிறத்தின் காரணமாக பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்ட சான் ரேச்சலுக்கு, பிறரால் பேசப்பட்ட அவரது நிறத்தைக் கொண்டே சாதித்துக் காட்டியுள்ளார்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: