பாரம்பரிய மரக்குதிரை தயாரிப்பில் ஈடுபடும் தஞ்சை பெண்

காணொளிக் குறிப்பு, பாரம்பர்ய மரக்குதிரை தயாரிப்பில் ஈடுபடும் தஞ்சை பெண்
பிரசுரிக்கப்பட்டது

கிட்டத்திட்ட அழிவுநிலைக்கே சென்றுவிட்ட மரக்குதிரை தொழிலை மீட்டு செய்துவருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த புஷ்பலதா. தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருபுவனம் பட்டு, கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் என 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன.

இதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை தரும் வகையில் அமைந்திருக்கிறது தஞ்சாவூர் மரக்குதிரை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் குழந்தைகள் பிறந்தால், தாய்மாமன் சீதனமாக மரக்குதிரையை வாங்கி கொடுக்கும் வழக்கம் சில மாவட்டங்களில் இருந்து வந்துள்ளது.

தயாரிப்பு: ஆர். அருண் குமார்படத்தொகுப்பு: வில்ஃப்ரெட் தாமஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: