ராஜ் குந்த்ரா வாழ்வில் நேபாள பயணம் ஏற்படுத்திய திருப்புமுனை

காணொளிக் குறிப்பு, ராஜ் குந்த்ரா வாழ்வில் நேபாள பயணம் ஏற்படுத்திய திருப்புமுனை
பிரசுரிக்கப்பட்டது

ராஜ்குந்த்ரா, ஒரு பஷ்மினா சால்வை வியாபாரி, வைர வியாபாரி, ஐபிஎல் அணியின் இணை உரிமையாளர் என பல அடையாளங்கள் கொண்டவர். 'சர்ச்சைகள்' அவரது வாழ்வில் புதியவை கிடையாது.

ராஜ் குந்த்ராவின் தந்தை லூதியாணாவில் இருந்து பிரிட்டனுக்குச் சென்று குடியேறியவர். அங்கு லண்டனில் பிறந்ததால் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றிருந்தார் ராஜ் குந்த்ரா.

இவரது தந்தை பேருந்து ஓட்டுநராக இருந்தார். பிறகு சிறிய கடை ஒன்றை நடத்தினார். இவரது தாய் அந்தக் கடையில் உதவியாளராக இருந்தார். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட குந்த்ரா, நேபாளத்துக்கு சென்று வந்த பிறகு தமது வாழ்க்கைப் பாதை மாறியதாக கூறுவார்.

இவரைப் பற்றி வேறு என்ன தெரியுமா? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :