எஸ்.பி.பி மரணம்: "போய் வாருங்கள் இசை சகாப்தமே"

காணொளிக் குறிப்பு, எஸ்.பி.பி மரணம்: "போய் வாருங்கள் இசை சகாப்தமே"
பிரசுரிக்கப்பட்டது

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், "எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார்," என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :