கொரோனா வைரஸ்: இனிமேல் புதிய சினிமாவை மக்கள் எப்படி பார்ப்பார்கள்?

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: இனிமேல் புதிய படங்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் என அனைத்தும் டிஜிட்டல் தளத்தில் நேயர்களை சென்றடையும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே எதிர்காலத்தில் பொழுதுபோக்குத் துறை எப்படி இருக்கும் என்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது!

டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பலர் தங்களின் வீடுகளிலேயே கண்டு ரசிப்பர். முதல் நாள் முதல் காட்சி ஆனால் வீட்டிலேயே!

காருக்குள் அமர்ந்து திரைப்படம் பார்ப்பது புதிய டிரண்டாகும். பெரிய ப்ரோஜக்டர்கள், குறைவான மக்கள், நட்சத்திரங்களுக்கு கீழே அமர்ந்து திரைப்படம் பார்க்கும் அனுபவம்… விரைவில் மக்களிடம் பிரபலமாகும்.

பல நடிகர்கள் தங்களை தாங்களே படம் பிடித்துக் கொள்வர். ஒரு நடிகர் தனது குடும்பத்தாரின் உதவியுடன் தான் நடிப்பதை மொபைலில் படம் பிடித்துக் கொள்வது குறித்து எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு தொழில்நுட்பத்தில் பெரிதான ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் வார இறுதியில் மெய்நிகர் உலக தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் ஓர் இசை நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிப்போகலாம். உங்களுக்கு தேவையானதெல்லாம் அதற்கான ஒரு ஹெட் செட் மட்டுமே.

கேளிக்கை பூங்காக்களில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கப்படுவர், ஆனால் அனைவரின் முகங்களிலும் மாஸ்குகள் இருக்கும். பூங்காக்களில் அவர்கள் புகைப்படம் எடுத்தாலும் அது மாஸ்குடன்தான்.

பொழுதுபோக்கின் வடிவங்கள் மாறாலம். ஆனால் அது மறைந்து போவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: