You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.எம். கிருஷ்ணா: "கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது"
மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள் என்கிறார் Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா.
மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியிடம் பேசினார் டி.எம். கிருஷ்ணா.
"மிருதங்கம் செய்ய பசுவின் தோல் பயன்படுத்தப்படுகிறதென்பது மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பார்கள்," என்கிறார் அவர்.
காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: