தமிழ் - ராஜஸ்தான் கலைகளை மண்ணால் இணைக்கும் சுடுமண் சிற்பி முனுசாமி

பிரசுரிக்கப்பட்டது

"நான் களிமண் சிற்பம் செய்யும் பாணி தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் என இரண்டு மாநிலங்களின் கலை பாணிகளின் கலப்பு பாணி. இந்த முறையைப் பயன்படுத்தி இன்று நான் செய்யும் 'வில்லியனூர் டெரக்கோட்டா' உலகளாவிய அளவில் சென்றுள்ளது'' என்கிறார் சுடுமண் சிற்பக் கலைஞர் வி.கே.முனுசாமி. இவர் சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மண்தான் என்னை உயர்த்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. புதுச்சேரி அரசின் பரிந்துரையால் எனக்கு கிடைத்த மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது, இந்த கலைக்காகவும் இந்த கலையில் எனது பங்களிப்பிற்காகவும் கிடைத்துள்ளது. மேலும் இந்த பத்மஸ்ரீ விருது இந்த பாரம்பரிய கலையை பாதுகாக்கவும், என்னை போன்றவர்களை ஊக்கப்படுத்தவும் செய்யும்," என்கிறார் முனுசாமி.

ஒவ்வொரு ஊரும் ஒரு கைவினையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்புத் திறன் பெறவேண்டும் என்று யோசனை கூறுகிறார் முனுசாமி.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: சிவக்குமார் ராஜப்பா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: